Advertisement

சிபிஎல் 2022: டெவால்ட் ப்ரீவிஸ் காட்டடி பேட்டிங்; செயிண்ட் கிட்ஸ் & பேட்ரியாட்ஸ் அபார வெற்றி!

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பேட்ரியாட்ஸ் அணியின் டெவால்ட் ப்ரீவிஸ் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை விளாசி அசத்தினார்.

Advertisement
 Dewald Brevis hits 5 huge sixes to hammer 30 off 6 balls against Trinbago Knight Riders
Dewald Brevis hits 5 huge sixes to hammer 30 off 6 balls against Trinbago Knight Riders (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 23, 2022 • 10:56 AM

கரீபிரியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 23, 2022 • 10:56 AM

அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் எவின் லூவிஸ் 15 ரன்னிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கேசி கார்டி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 78 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

Trending

இறுதியில் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை விளாசி 30 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கல் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஜூலியன், காலின் முன்ரோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் செய்ஃபெர்ட் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 59 ரன்களில் செய்ஃபெர்ட் ஆட்டமிழக்க, 31 ரன்கள் சேர்த்த நிலையில் கீரென் பொல்லார்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்டமுடியவில்லை.

 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement