ஐபிஎல் 2021: பந்தை பிடிப்பதில் சதமடித்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பிங் முறையில் 100 கேட்சுகளைப் பிடித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 44ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் சிஎஸ்கேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
Trending
சென்னை அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் விக்கெட் கீப்பிங் முறையில் ஜேசன் ராய், விருத்திமான் சஹா, ப்ரியாம் கார்க் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையை தோனி படைத்துள்ளார்.
(C) Dhoni X 100!#SRHvCSK #WhistlePodu #Yellove pic.twitter.com/vsRr4xesr1
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) September 30, 2021
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது சிஎஸ்கேவின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now