
Dhoni is always there to guide youngsters: Bhuvneshwar Kumar (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி, இலங்கையில் சுற்றுபயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார்.