
Dilruwan Perera announces retirement from International Cricket (Image Source: Google)
இலங்கையைச் சேர்ந்த 39 வயது சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா. இவர் 2007 முதல் 2021 வரை இலங்கை அணிக்காக 43 டெஸ்டுகள், 13 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 விக்கெட்டுகளை 8 முறை எடுத்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தில்ருவன் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. எனினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக 30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பிறகு, ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எனினும் ஆஸ்திரேலிய செல்லும் இலங்கை டி20 அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை.