
dinesh karthik created unique record in t20 cricket (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படிமுதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 190 ரன்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கலக்கினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தக்கு எதிரான டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக், 11, 12 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.