
நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 169 என்ற இலக்குடன் ஆடிய ஆர்சிபி 12.3 ஓவர்களில் 87/5 என்ற நிலையில் தடுமாறியது. ஆட்டம் ஆர்சிபியின் கைகளில் இருந்து மெதுவாக நழுவியது.
ஆனால் அதன்பின் தினேஷ் கார்த்திக் ஷாபாஸ் அகமதுவுடன் சேர்ந்து வெற்றியை தேடித்தந்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்களும், ஷாபாஸ் அகமது 26 ரன்களுடன் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்களும் எடுத்தனர்.
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், சென்னை சூப்பர் கிங்ஸுடன் சுமார் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்து, அவர்களுடன் சேர்ந்து மூன்று சாம்பியன் பட்டங்களை வென்ற பிறகு, ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ. 7 கோடிக்கு எடுக்கப்பட்டார். கடந்த சீசனின் இறுதியில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால், அவர் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.