
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது. முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
கரோனா அச்சுறுத்தலால் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருமே 10 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பயோ பபுள் ஆகிய விதிகளை பின்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வர்ணனை செய்ய இந்தியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த பல முன்னணி வர்ணனையாளர்கள் தயக்கம் காட்டியதையடுத்து, இந்தியா சார்பில் சுனில் கவாஸ்கருடன், இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.