
இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வரும் டி20 உலக கோப்பையில் தனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
ஆனால் அவரது ஆட்டம் தற்போது அந்த அளவில் சிறப்பாக இல்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பாரா ? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ரஞ்சி அணியில் தான் இனி தொடர்ந்து விளையாட போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “தமிழ்நாடு அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் எனக்கு விளையாட விருப்பம் இல்லை. ஏனெனில் என்னுடைய இடத்தால் மற்ற இளம் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஜெகதீசனுக்கு என்னால் வாய்ப்பு பறிபோகும் எனவே அந்த சூழ்நிலை ஏற்பட கூடாது என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன்.