இவங்க இரண்டு டீமும் தான் ஃபைனலுக்கு போவாங்க - தினேஷ் கார்த்திக்
டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்று தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. மேலும் நேற்றைய தினம் ஐசிசி டி20 உலக கோப்பைக்கான முழு போட்டி அட்டவணையையும் வெளியிட்டது.
Trending
இந்த டி20 உலக கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளில் ஒரு அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பிருப்பதாகத்தான் பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பார்க்கின்றனர்.
குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், டி20 உலக கோப்பை தொடர் நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கும் மற்ற நாடுகளை காட்டிலும் நன்கு பழக்கப்பட்டது என்பதால், இந்த 2 அணிகளில் ஒன்றுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், கெய்ல், பொல்லார்டு, பிராவோ ஆகிய டி20 கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்களையும், பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களையும் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக திகழ்வதால் அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் எந்த அணிகள் ஃபைனலில் மோதும், அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற பல தங்களது கருத்துகளை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக்,“இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் ஃபைனலில் மோதுவதை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். கோப்பையை வெல்வதில் இந்தியாவுக்கு அடுத்த எனது ஃபேவரைட் வெஸ்ட் இண்டீஸ் தான்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now