
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிடாதாஷ் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய ரசிகர்களால் நிச்சயம் மறந்திருக்க முடியாது. அந்தப் போட்டியில் புலிகளை அழ வைத்து இந்திய ரசிகர்களை குஷிப் படுத்தியவர்தான் தினேஷ் கார்த்திக். அந்தப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அப்போட்டியின் 19வது ஓவரில் மட்டும் அவர் 22 ரன்கள் குவித்தார். மொத்தமாக வெறும் 8 பந்துகளில் அவர் 29 ரன்கள் விளாசித் தள்ளினார். தினேஷ் கார்த்திக்கா இது இவரை ஏன் இத்தனை நாள் இந்திய அணி பயன்படுத்தவில்லை என பலரும் அந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். அப்படி ஒரு நாக் விளையாடி இருந்தார்.
அப்படியான இறுதி நேர அதிரடி ஆட்டத்தை நடப்பு ஐபிஎல் சீசனில் பல முறை ஆடியுள்ளார் தினேஷ் கார்த்திக். பெங்களூர் அணியில் அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 19ஆவது ஓவரில் களமிறங்கினார். முதல் இரண்டு பந்துகளிலும் ரன் எடுக்கவில்லை.