பாபர் ஆசாம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடிப்பார் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விரைவில் மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பார் என கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானி அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் பாபர் ஆசாம். தற்போது 27 வயதான பாபர் அசாம் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால் டெஸ்ட் போட்டியின் தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் முதல் நான்கு இடத்தில் இருக்கிறார்கள்.
Trending
இதுவரை, பாபர் அசாம் 40 டெஸ்ட் போட்டிகளில் 2851 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.98. இதில் 6 சதங்களும் 21 அரை சதங்களும் அடங்கும்.
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக் பாபர் அசாம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “அவர் ஒரு அற்புதமான வீரர். மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடுகிறார். பாகிஸ்தான் நாட்டிற்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். அவர் பேட்டிங் திறமையின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிச்சயமாக மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்க முடியும்.
‘ஃபேப் ஃபோர்’ (இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட்) வலுவான நிலையில் நீண்ட காலமாக இருக்கிறார்கள். நிச்சயமாக இவரும் இதில் சேர்ந்து ‘ஃபேப் ஃபைவ்’ ஆக மாற்றுவார்.
அவர் விளையாடும் போது இரண்டு விசயங்களைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். முன்னோக்கிச் சென்று ஆடினாலும் பின்னோக்கிச் சென்று ஆடினாலும் சமநிலையில் பந்தை அடிக்கிறார். பெரும்பாலும் அவர் கண்களுக்கு கீழே பந்தைப் பார்த்து அடிக்க ஆரம்பிக்கிறார். இது அபாரமான ஒன்று. இன்னொன்று, பந்து பிட்ச் ஆனதுமே அடித்து விடுவதுதான் அவரைச் சிறப்பான வீரராக மாற்றுகிறது.
சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் போது ஆட்டத்தின் நுணுக்கங்களை சிறுது மாற்ற வேண்டும். சில நேரங்களில் 1% மாற்றம் பெரிய வெற்றிகளைத் தரும். அவர் சீக்கரமே அதை சரிசெய்து மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now