தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பீடாதீர்கள் - சௌரவ் கங்குலி!
தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடக்கூடாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பந்த், அணிக்குள் வந்த புதிதில் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக்கொண்ட ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கியதால் விமர்சனங்கள் குறைந்தன.
டி.ஆர்.எஸ் எடுப்பதிலும் கேப்டனுக்கு தன்னால் முடிந்தளவிற்கு சரியாக வழிகாட்டினார். ரிஷப் பந்துக்கு எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், ஐபிஎல்லில் மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 15ஆவது ஓவரில் டிம் டேவிட்டுக்கு எடுக்க வேண்டிய ஒரு ரிவியூவை எடுக்காமல் விட்டார். அதுதான் அந்த போட்டியில் டெல்லி அணி தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க காரணமாக அமைந்தது.
Trending
இதையடுத்து ரிவியூ எடுப்பதில் வல்லவரான தோனியுடன் மீண்டும் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுகிறார் ரிஷப் பந்த்.
இந்நிலையில், தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடக்கூடாது என்று கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி,“பந்தை தோனியுடன் ஒப்பிடாதீர்கள். தோனி நீண்டநெடிய அனுபவம் கொண்டவர். சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20, ஐபிஎல் என மொத்தம் 500 போட்டிகளுக்கு மேல் கேப்டன்சி செய்தவர். எனவே அவருடன் ரிஷப்பை ஒப்பிடுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now