
ஐபிஎல் 2021 போட்டியின் 2ஆம் பகுதியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்குத் தேர்வானார். இதுவரை இதுவரை 2 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் பலரும் எதிர்பார்த்தது போல அவரால் ஆல்ரவுண்டர் திறமையைச் சர்வதேச ஆட்டங்களில் வெளிப்படுத்த முடியவில்லை. 5 சர்வதேச ஆட்டங்களிலும் சேர்த்து 8 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தேர்வாகவில்லை.
இந்நிலையில் பாண்டியா இல்லாததால் சரியான ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்ய இந்திய அணி தடுமாறுவது பற்றி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட் என்பது திறமையை வெளிப்படுத்தும் இடம் என எப்போதும் நம்புவேன், அங்கு வந்து திறமையை வளர்த்தெடுக்க முயலக்கூடாது. வளர்த்தெடுக்கும் முயற்சியை உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்தியா ஏ அளவிலும் செய்யவேண்டும்.