
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அணி செய்து வருகிறது. இந்திய அணி வீரர்கள் மனதளவில் தைரியமாக இருப்பதற்கு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் ஏற்கனவே நடந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்ற சாதகம் மற்றும் பாதகமான விஷயங்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அரை இறுதி சுற்றில் நியூசிலாந்து அணியிடம் பரிதாபமான தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் ஒரு ரன்களில் தன்னுடைய விக்கெட்டை இழந்தனர், அதற்குப் பின் ரிஷப் பந்த் 36 ரன்கள் எடுத்த நிலையிலும் தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை இழந்தனர்.
இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோணி கூட்டணி இந்திய அணிக்கு நல்ல ரன்களை பெற்றுக் கொடுத்தது, இதில் ஏழாவது பேட்டிங்கில் களமிறங்கிய தோனி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 49ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.