
உலக அளவில் கேன் வில்லியம்சன் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார். நேரத்திற்கு தகுந்தார்போல் முடிவெடுத்து, அணியை கட்டுக்கோப்பாக, அமைதி வழியில் வழிநடத்துவதில், மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து இவர்தான் சிறந்தவர் என பலர் கூறுவதுண்டு.
இவர் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஐசிசி தொடர்களில் பல முறை அணியை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்து சென்றுள்ளார். கடந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக சொதப்பிய பிறகு கேன் வில்லியம்சனுக்கு அப்பதவி தேடி வந்தது. இருப்பினும், அணி தொடர்ந்து தோல்விகளைத்தான் சந்தித்து வந்தது.
இதனால், 15ஆவது சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் கூட்டிச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் கேன் வில்லியம்சன் இருக்கிறார். மீண்டும், பழைய மாதிரி புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தை பிடித்தால், வில்லியம்சனின் கேப்டன் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. இதனால், துவக்கம் முதலே வெற்றிகளை பெற்றுக்கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது.