
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
கோலியின் வருகையால் எந்த வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அணியில் பெரிய அளவில் மாற்றம் உள்ளது. குறிப்பாக துவக்க வீரர்களாக விளையாடி வந்த ரோஹித்-ராகுல் ஆகியோர் இருவரும் இன்றி மாயங்க் அகர்வால் மற்றும் கில் ஆகிய இருவரும் ஓப்பனர்களாக விளையாடி வருகின்றனர்.