
Driven by women, Barcelona votes for cricket ground (Image Source: Google)
சர்வதேச கால்பந்து விளையாட்டில் அடிக்கடி உபயோகப்படும் பெயர் ஸ்பெயின் கால்பந்து அணியான பார்சிலோனா. உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணிக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில் பார்சிலோனா அரசு மக்களின் மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவானது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
ஏனெனில் இந்த கருத்துக்கணிப்பில் கால்பந்துக்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் படியும் அதிகளவு மக்கள் வாக்களித்துள்ளனர்.