கார் கண்ணாடியை சிதற வைத்த எல்லிஸ் பெர்ரி; வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் ஒன்று அங்கிருந்த கார் கண்ணாடியை சிதறடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 58 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியில் அலிசா ஹீலி 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 55 ரன்களையும், தீப்தி சர்மா 33 ரன்களையும், பூனம் கெம்னர் 31 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.
Queen Perry mass…breaks the glass #EllysePerry pic.twitter.com/nK8ja309C6
— Hank (@Hanky_bb) March 4, 2024
இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அடித்த சிக்சர் ஒன்று அங்கு கண்காட்சிகாக வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை பதம்பார்த்தது. அதன்படி, இன்னிங்ஸின் 19ஆவது ஓவரில் 5ஆவது பந்தை எல்லிஸ் பெர்ரி சிக்சருக்கு பறக்கவிட்டார். அவர் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். அப்போது அங்கு கண்காட்சிகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை சிதறடித்தது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now