லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று அசத்தியது. முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
Trending
அதன்படி கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி மட்டுமே லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது.
அதில் 1986ஆம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தி 2ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நேற்று அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now