ENG vs IND, 1st T20I: ஹர்திக் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 199 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சௌத்தாம்டனில் இன்று நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை களமிறங்கினர்.
Trending
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 8 ரன்களோடு இஷான் கிஷானும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அசத்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 33 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் முதல் அரைசதமும் இதுதான்.
பின்னர் 17 ரன்களில் அக்ஸர் படேலும், 51 ரன்களில் ஹர்திக் பாண்டியாவும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தினேஷ் கார்த்திக் ஒருசில பவுண்டரிகளை விளாசினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now