ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ரசிகர்களில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவானது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், டேனியல் லாரன்ஸ், ஜாக் கிரௌலி ஆகியோருக்கு பதிலாக மொயீன் அலி, மார்க் வுட், ஹசிப் ஹமீத் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து (விளையாடும் XI): ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஹசீப் ஹமீட், ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் , மொயீன் அலி, சாம் கரன், ஒல்லி ராபின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா (விளையாடும் XI): ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஸ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் , ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now