
Eng vs Ind, 2nd Test: Shardul Thakur unavailable for selection due to injury (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சின் போது இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர், பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் உறுதிசெய்துள்ளார்.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.