
ENG vs IND: Indian Team Departs For London For 2nd Test Against England (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் கைவிடப்பட்டதால், போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.