ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இத்தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகினர். இதனால் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் பயிற்சியின் போது தலையில் காயமடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிச்சயம் ஒருவார கலம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மயாங்க் அகர்வால் விலகியுள்ளார். இதனால் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now