Advertisement

ENG vs IND: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 10, 2021 • 14:40 PM
Eng vs Ind: Moeen Ali recalled to hosts' squad for second Test
Eng vs Ind: Moeen Ali recalled to hosts' squad for second Test (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் முதல் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending


கடந்த 23 மாதங்களில் ஒரு முதல்தர ஆட்டங்களில் மட்டுமே மொயீன்  அலி விளையாடியுள்ளார். எனினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் மொயீன்  அலி விளையாடினார். அந்த ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement