
ENG vs IND: Prithvi Shaw, Suryakumar Yadav Join Team After Completing Quarantine (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியின் சேர்க்கப்பட்ட பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.