
ENG vs IND : Ravichandran Ashwin To Play The Third Test (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாதது, பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது.
இதையடுத்து லீட்ஸில் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அஸ்வின் இடம்பெறுவார என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது.