Advertisement

முன்னாள் பயிற்சியாளருக்கு மதுபானத்தை பரிசளித்த ரிஷப் பந்த்!

இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Advertisement
 ENG vs IND: Rishabh Pant gifts Player of the Match champagne bottle to Ravi Shastri
ENG vs IND: Rishabh Pant gifts Player of the Match champagne bottle to Ravi Shastri (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 18, 2022 • 02:47 PM

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இதில் மான்செஸ்டரில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரிஷப் பந்த் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 18, 2022 • 02:47 PM

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்னில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது ஒரு நாள் தொடரையும் வென்று முத்திரை பதித்தது.

Trending

ஒருநாள் தொடரை வெல்ல காரணமாக இருந்த ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அதன் பின்னர் பேசிய அவர், “ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்து இருக்கிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். களத்தில் இருந்த போது பந்தில் மட்டுமே எனது கவனம் இருந்தது. இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். அதிகமான போட்டிகளில் விளையாடும் போதுதான் அனுபவம் கிடைக்கிறது.

இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. எனவே இங்கிலாந்தை 259 ரன்னில் ஆல் அவுட் செய்ததற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன். இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மைதானத்தில் கண்ட ரிஷப் பந்த், உடனடியாக அவரிடம் சென்று மதுபானத்தை பரிசாக அளித்தார். இக்காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement