
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை (ஆகஸ்ட் 4) நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், தொடக்க வீரர் மயன்க் அகர்வாலும் காயமடைந்து முதல் போட்டியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ஆனால் வீரர்களின் பெயர்களை நேரடியாக தெரிவிக்காமல், திரைப்பட கதாபாத்திரங்களின் பெயர்கள் அடங்கிய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து தனது புதிர் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தூள்ளார்.
ரித்திக் ரோஷனின் அறிமுக படத்தின் புகைப்படத்தை ரோஹித் சர்மாவின் பெயரை குறிப்பிடுவதற்காக பகிர்ந்துள்ளார். ராகுல் என்ற கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட ஷாருக்கான் புகைப்படத்தை ராகுலுக்காக வைத்துள்ளார். துருக்கி டிவி தொடர் கேரக்டரை விராட் கோலியை குறிக்கும் வகையிலும், எப்போதும் மிகவும் அமைதியாக இருக்கும் புஜாராவிற்கு ஸ்டோன் கோல்டின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.