
இங்கிலாந்து vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே நியூசிலாந்து அணி தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs நியூசிலாந்து
- இடம் - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
- நேரம் - இரவு 10.30 மணி (இந்திய நேரப்படி)