
ENG vs NZ, 2nd Test: Daryl Mitchell, Tom Blundell's ton helps New Zealand in cofotable position (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்ச் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்களும் பிளண்டல் 67 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள்.