
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஒருபக்கம் ஃபின் ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் டெவான் கான்வே 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். பின் ஆலனுடன் இணைந்த கிளென் பிலீப்ஸும் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.