Advertisement

ENG vs NZ, 4th ODI: டேவிட் மாலன் சதம்; நியூசிலாந்துக்கு 312 டார்கெட்!

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ENG vs NZ, 4th ODI: டேவிட் மாலன் சதம்; நியூசிலாந்துக்கு 312 டார்கெட்!
ENG vs NZ, 4th ODI: டேவிட் மாலன் சதம்; நியூசிலாந்துக்கு 312 டார்கெட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 15, 2023 • 08:59 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. இதைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 15, 2023 • 08:59 PM

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, நியூசிலாந்தை பந்துவீச அறிவித்தது.

Trending

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 29, ஹாரி ப்ரூக் 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் இணை டேவிட் மாலன் - ஜோஸ் பட்லர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மாலன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 36 ரன்களுக்கு அட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மாலன் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 129 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 28 ரன்களுக்கும், மொயீன் அலி 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சாம் கரணும் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ் ஆகியோர் ஒரு சில பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முயிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளையும், டெரில் மிட்செல், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement