
Eng vs NZ: Hosts add Dom Bess to their squad for 2nd Test (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி வெற்றியாளர் இன்றி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கவுண்டி போட்டியில் அபாரமாக செயல்பட்டு வந்தது காரணமாகவும், ஒல்லி ராபின்சன் இடை நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாகவும் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.