Advertisement
Advertisement
Advertisement

இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 27, 2024 • 15:43 PM
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

England vs Pakistan Dream11 Prediction 3rd T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை (மே 28) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தொட்ரை வெல்ல ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  

ENG vs PAK Match Details

Trending


 • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
 • இடம் - சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்
 • நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG vs PAK: Pitch Report

கார்டிஃபில் உள்ள சோபியா கார்டனில் உள்ள பிட்ச்சானது சீரான வேகம் மற்றும் பவுன்ஸிற்கு சாதகமாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்த வசதியாக இருக்கும். ஆனால் ஆட்டம் செல்ல செல்ல பிட்ச்சின் தன்மையானது பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் இங்கு நிலைத்து விளையாடும் வீரர்கள் அதிக ஸ்கோரை குவிக்க முடியும். மேலும் இங்கு சேஸிங் செய்வது எளிதாக இருக்கும் என்ற காரணத்தால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது அவர்களுக்கு உதவலாம். 

ENG vs PAK: Head-to-Head

 • மோதிய போட்டிகள் - 31
 • இங்கிலாந்து - 20
 • பாகிஸ்தான் - 09
 • முடிவில்லை - 02

ENG vs PAK: Live Streaming Details

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் இத்தொடரானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

England vs Pakistan Predicted Teams

இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி

பாகிஸ்தான்: சைம் அயூப், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், அசம் கான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

ENG vs PAK: Dream11 Team

 • விக்கெட் கீப்பர்கள்: பில் சால்ட் (கேப்டன்), ஜோஸ் பட்லர்
 • பேட்டர்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், பாபர் ஆசாம், வில் ஜாக்ஸ் (துணை கேப்டன்), ஃபகார் ஸமான்
 • ஆல்ரவுண்டர்கள்: மொயின் அலி, இமாத் வாசிம்
 • பந்துவீச்சாளர்: ஷஹீன் அஃப்ரிடி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான்

England vs Pakistan Fantasy Tips, ENG vs PAK: Dream11 Team, England vs Pakistan: Predicted XIs, ENG vs PAK: Pitch Report, ENG vs PAK: Live Streaming Details, ENG vs PAK: Head-to-Head, ENG vs PAK: Dream11 Prediction 3rd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement