
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் ஓவரிலேயே இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அகியோர் ரன் ஏதுமின்றி ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், மக்சூத், ஷாகீல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 26 ரன்களிலே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும் எதிரணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.