
ENG vs SA 1st Test: Rabada, Erwee shine as South Africa take healthy lead on day two (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. லண்டன் லார்ட்ஸில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ்5, ஜாக் க்ராவ்லி 9 ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
சீனியர் வீரர் ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோவ் 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, பென் ஃபோக்ஸ் 6 ஆகியோரும் சொதப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஒல்லி போப் அரைசதம் அடித்தார்.