
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி சௌத்தாம்ப்டனில் இன்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்ரிக்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 50 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களை குவித்தார்.
3ஆம் வரிசையில் இறங்கிய ரிலே ரொஸ்ஸோவ் அதிரடியாக ஆடி 18 பந்தில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் டேவிட் மில்லர் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார். மார்க்ரம் பொறுப்புடன் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். மார்க்ரம் 36 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.