ENG vs SL, 1st T20: வெல்லப்போவது யார்? இங்கிலாந்து vs இலங்கை!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃப்பில் நடக்கிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இலங்கை-இங்கிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 23) நடக்கிறது.
இங்கிலாந்து
Trending
ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அதிலும் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் இணை சமீப காலமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டேவிட் மாலன் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல் ஈயன் மோர்கன், மோயின் அலி, சாம் கரண் என பல டி20 ஸ்பெஷலிஸ்டுகளும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பலம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அதில் ரஷித் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதும் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இலங்கை
குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி சமீப காலமாக சரிவர விளையாடமல் தோல்வியை தழுவி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரையும் இழந்து தடுமாற்றத்தை சந்தித்தது.
அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லாததாலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தினுடான சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், குணதிலக, டிக்வெல்லா போன்ற அதிரடி வீரர்கள் ஓரளவேனும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் உருவாகும்.
பந்துவீச்சில் இசுரு உதானா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் எதிரணிக்கு சற்று நெருக்கடியை கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அசுர பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி எச்சிரமமும் இன்றி இலங்கை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இதுவரை இங்கிலாந்து - இலங்கை அணிகள் 9 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 5 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயன் மோர்கன் (கே), கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், சாம் பில்லிங்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட்.
இலங்கை - தனுஷ்கா குணதிலக, பாதும் நிசங்கா, குசுல் பெரேரா (கே), தாசுன் ஷானகா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்சய் டா சில்வா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், துஷ்மந்தா சமீரா.
Win Big, Make Your Cricket Tales Now