ENG vs SL, 2nd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்தது.
அதன்பின் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றையப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஜேசன் ராய், டாம் கரண் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் இலங்கை அணி நான்கு மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கே), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் கரண், டேவிட் வில்லி, டாம் கரண், ஆதில் ரஷீத், மார்க் வுட்.
இலங்கை - பாதும் நிசங்கா, குசல் பெரேரா (கே), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தசுன் ஷானகா, சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா, அசிதா ஃபெர்னாண்டோ
Win Big, Make Your Cricket Tales Now