
ENG vs SL, 2nd ODI: Sri Lanka end their innings at The Oval on 241/9. (Image Source: Google)
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் குசால் பெரேரா, பாதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா - தசுன் ஷானகா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தனஞ்செய அரைசதம் அடித்து அசத்தினார்.