
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 23) கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கார்டிஃபில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் நிரோசன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.