Advertisement

இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 28, 2024 • 01:59 PM

England vs Sri Lanka 2nd Test Dream11 Prediction: இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 28, 2024 • 01:59 PM

ENG vs SL 2nd Test: போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டண்ட்
  • நேரம் - ஆகஸ்ட் 29, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

ENG vs SL 2nd Test Pitch Report

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 146 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 52 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேசமயம், 43 போட்டிகளில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன.  இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோரானது 309 ரன்களாவும், நான்காவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது வெறும் 156 ரன்களாக உள்ளது. இங்கு பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவரும் நல்ல உதவியைப் பெறுவர்கள் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ENG vs SL 2nd Test: Where to Watch?

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் நேலை ஒளிபரப்பு செய்கிறது. மேற்கொண்டு ரசிகர்கள் இத்தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 

ENG vs SL Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 36
  • இங்கிலாந்து - 17
  • இலங்கை - 08
  • முடிவில்லை - 11

England vs Sri Lanka 2nd Test Probable Playing XI

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ்,  ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.

இலங்கை உத்தேச லெவன்: திமுத் கருணாரத்ன/பதும் நிஷங்கா, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க

ENG vs SL 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பென் டக்கெட் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித்
  • பேட்ஸ்மேன்கள் - ஒல்லி போப், ஹாரி புரூக்
  • ஆல்ரவுண்டர்கள் - ஏஞ்சலோ மேத்யூஸ், கிறிஸ் வோக்ஸ் (கேப்டன்), தனஞ்சய் டி சில்வா, ஜோ ரூட், கமிந்து மெண்டிஸ்
  • பந்துவீச்சாளர்கள் – ஒல்லி ஸ்டோன், மிலன் ரத்நாயக்க

ENG vs SL 2nd Test Dream11 Prediction, ENG vs SL Dream11 Prediction, Today Match ENG vs SL, ENG vs SL Test Series, ENG vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, EdddNG vs SL Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka Tour of England, Injury Update of the match between England vs Sri Lanka

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement