ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்! (Image Source: Google)
இங்கிலந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 4 சிக்ஸ்ர்கள் என 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு அரைசதத்தை நெருங்கிய ஜான்சன் சார்லஸும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அதிரடி காட்டிய ரோவ்மன் பாவெலும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் - ரொமாரியோ ஷெஃபர்ட் இணை அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Scoreஇதில் ரொமாரியோ ஷெஃபர்ட் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 29 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் சிக்ஸர் அடித்தும் அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஜேக்கப் பெத்தெல் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News