Advertisement

ENG vs IND: இங்கிலாந்து அணியில் மஹ்மூத் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement
England Add Saqib Mahmood To Test Squad After Broad Injury Scare
England Add Saqib Mahmood To Test Squad After Broad Injury Scare (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 11, 2021 • 05:57 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 12) முதல் தொடங்குகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 11, 2021 • 05:57 PM

முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாக அணியில் சேர்க்கப்பட்டார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

இந்நிலையில் இங்கிலாந்து அணியில்  வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் மூத்த பந்துவீச்சாளர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹ்மூத் அணியில் தேர்வாகியுள்ளார். 

24 வயதான மஹ்மூத் இதுவரை 7 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த டாம் பெஸ் அணியிலிருந்து விலகி, யார்க்‌ஷைர் அணிக்காக விளையாடச் சென்றுள்ளார். காயம் காரணமாக ஆண்டர்சன், பிராட் ஆகிய இருவராலும் லார்ட்ஸ் டெஸ்டில் விளையாட முடியாமல் போனால், மஹ்மூத் இங்கிலாந்து அணியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement