
England Announce Playing XI For 2nd West Indies Test; Make One Change (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் தொடர் போட்டி இன்று பார்போடாஸில் தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் பங்கேற்காத நிலையில் அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் சாகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.