
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் மூன்று பயிற்சியாளர்கள், நான்கு குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரருமான டேவிட் பூன், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜனவரி 5 அன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் டேவிட் பூன் பணியாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் பெர்னார்ட், போட்டி நடுவராக சிட்னி டெஸ்டில் பணியாற்றவுள்ளார்.