
England end their innings on 498/4, the highest team total in men's ODI history (Image Source: Google)
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த பில் சால்ட் - டேவிட் மலான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் கடந்து, 2ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்தார்கள். இதில் பில் சால்ட் தனது முதல் சர்வதேச போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.