
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அறிவிப்பு பொறுத்தவரை பேட்டிங் வலுவாக உள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்களும் அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றி வருகின்றனர். எனினும் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். இந்திய அணியின் பலமாக சூரியகுமார் யாதவ் விளங்கி வருகிறார். இறுதிப் போட்டிக்கு முன்னேற போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அரையிறுதியில் எந்த அணியை சந்தித்தாலும் அது மிகவும் கடினமான போட்டியாக தான் இருக்கும். ஏனெனில் சூப்பர் 12 சுற்றில் பலமான அணிகளை வீழ்த்தி தான் அரை இறுதி சுற்றுக்கு இரண்டு அணிகளுமே வந்திருக்கும்.