Advertisement

ENG vs SA, 3rd Test: வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து!

3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 130 ரன்கள் என்ற எளிய இலக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

Advertisement
England Needs 130 To Win The Test Series Against South Africa
England Needs 130 To Win The Test Series Against South Africa (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 12, 2022 • 06:49 AM

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் லண்டன் கெனிங்டன்  ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 12, 2022 • 06:49 AM

முதல் 2 நாள் ஆட்டங்கள் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ஆம் நாள் தான் போட்டியே தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Trending

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த்ச தென் ஆப்பிரிக்க வீரர்கள், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடிடம் சரணடைந்தனர். இதில் ஒல்லி ராபின்சன் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்த முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்கோ யான்சென் தான் 30 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த போப் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ யான்சென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் 30 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 2ஆவது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்கள் அடித்தார். 

மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 169 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்டானது. 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸ் முடிவில் 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் ஸாக் கிரௌலி - அலெக்ஸ் லீஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸாக் கிரௌலி 57, அலெக்ஸ் லீஸ் 32 ரன்களிலுடனும் களத்தில் உள்ளனர். 

இதனால் 5ஆம் நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 33 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement